நிலத்துக்காகப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா? – கள நிலவரம் – வீடியோ

நிலத்துக்காகப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா? – கள நிலவரம் – வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதாக அறிவித்தது, அதற்கு எதிரான போராட்டத்தை முடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது என தமிழ்நாடு அரசு தங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுவதாக நினைக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)