ஆர்டிக் தீவான கிரீன்லாந்தை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு,
ஆர்டிக் தீவான கிரீன்லாந்தை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - காணொளி

அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைக்க விரும்புவதாகக் கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமித்து டென்மார்க்குடன் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

டிரம்பின் செயலுக்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. என்ன நடந்தது? பரந்து விரிந்த ஆர்டிக் தீவான கிரீன்லாந்தை டிரம்ப் குறிவைப்பது ஏன்?

கிரீன்லாந்துக்கான சிறப்புத் தூதராக லூசியானா மாகாண ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரியை டிரம்ப் நியமித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி டிரம்பிடம் கேள்வி எழுப்பியபோது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து தேவை, அதை நாங்கள் பெற வேண்டும் எனக் கூறினார்.

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன்லாந்தை கோபப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரப் போவதாக கிரீன்லாந்து தெரிவித்துள்ளது.

எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிக்க வேண்டும், பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என கிரீன்லாந்து பிரதமர் யென்ஸ் - ஃபிரடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான தன்னார்வப் பதவியில் பணியாற்றுவது தனக்குப் பெருமை என சிறப்பு தூதர் லாண்ட்ரி தெரிவித்துள்ளார்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு