காணொளி: ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டில் தீ விபத்து

காணொளிக் குறிப்பு, ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டில் தீ விபத்து
காணொளி: ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டில் தீ விபத்து

பிரேசிலில் ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடு COP30 இன் போது தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சுமார் ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் வந்ததாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 21 பேரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை எழுவதை பிபிசி நிருபர்கள் கண்டனர். மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படை வாகனங்கள் உள்ளே விரைந்து செல்வதைக் காண முடிந்தது.

ஆறு நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாகவும், புகையை சுவாசித்ததால் 13 பேர் சிகிச்சை பெற்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான அடுத்த நடவடிக்கைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருந்தன, ஆனால் தீ விபத்து பேச்சுவார்த்தைகளை நிறுத்தப்பட்டன.

இருப்பினும், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு