இலங்கையில் பட்டத்தோடு வான் நோக்கி இளைஞர் இழுத்து செல்லப்படும் காட்சி
இலங்கையில் பட்டத்தோடு வான் நோக்கி இளைஞர் இழுத்து செல்லப்படும் காட்சி
இலங்கையின் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பகுதியில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரிய பட்டத்தை வானில் ஏற்றும் நிகழ்வு ஜனவரி 8ம்தேதி நடந்தது.
பலரும் கூடி பட்டத்தை ஏற்ற முயன்றபோது, கடும் காற்றின் அழுத்தம் காரணமாக இளைஞர்களின் கட்டுப்பாட்டை இழந்த பட்டத்தின் கயிற்றில், இளைஞர் ஒருவர் வானை நோக்கி இழுத்து செல்லப்பட்டார். கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்ட இளைஞர், பத்திரமாக கீழிறங்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



