காணொளி: பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோதி கூறியது என்ன?

காணொளி: பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோதி கூறியது என்ன?

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பாரதியாரின் பாடல் வரிகளை குறிப்பிட்டார்.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே 'வந்தே மாதரம்' தொடர்பாக சச்சரவு தொடர்ந்து வருகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது வந்தே மாதரம் பாடலின் சில முக்கிய பகுதிகளை காங்கிரஸ் நீக்கியதாக பாஜக குற்றம் சாட்டுகிறது, ஆனால் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என காங்கிரஸ் கூறுகிறது.

மேலும், பாஜகவின் தலைவர்கள் பலரும் இப்பாடலை கல்வி நிறுவனங்களில் பாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது என பாஜகவினர் கோரிக்கையை எதிர்த்துவருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு