You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ரகசிய என்று பொருள். இந்த வகை விமானங்கள் எதிரிகள் அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் பெரிய திட்டம் ஆகும். சில தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 'மேம்பட்ட நடுத்தர போர் விமானம் அதாவது AMCA மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும்.
"இந்த திட்டம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் சோதனை மாதிரியை உருவாக்க நாட்டின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய படி" என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், தொடக்கத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
சரி, இந்த திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது? மேலதிக விவரங்கள் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு