காணொளி: கர்நாடகாவில் பேருந்து - லாரி மோதி விபத்து; குறைந்தது 11 பேர் பலி
காணொளி: கர்நாடகாவில் பேருந்து - லாரி மோதி விபத்து; குறைந்தது 11 பேர் பலி
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர்.
32 பயணிகளுடன் பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தும் எதிரே வந்த லாரியும் மோதியதில் சொகுசுப் பேருந்து தீ பிடித்து எரிந்ததாகவும் இந்த விபத்து சுமார் 2மணியளவில் நடந்ததாகவும் அதிகாரிகள் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



