காணொளி: 'இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது' - டிரம்ப் பேச்சு
செனட்டர் லிண்ட்சே கிரஹாம்: நீங்கள் மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கி, புதினின் போர் இயந்திரம் தொடர்ந்து இயங்குவதற்கு உதவுகிறீர்கள் என்றால், வரிகளின் மூலம் அதை ஒரு கடினமான தேர்வாக மாற்றுவதற்கான திறனை அதிபருக்கு வழங்க நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியா மீது அவர் எடுத்த நடவடிக்கைதான், இந்தியா இப்போது குறைந்த அளவு ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்குக் காரணம் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். எனவே, இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.
டிரம்ப்: அடிப்படையில் இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது. மோதி ஒரு மிக நல்ல மனிதர். ஆமாம். அவர் ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியடைந்தது அவருக்குத் தெரியும், என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம் என்றும் அவருக்குத் தெரியும். அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். அதனால் நாங்கள் அவர்கள் மீது வரிகளை மிக விரைவாக உயர்த்த முடியும், அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



