காணொளி: குரங்கு பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டிக் குரங்கு
காணொளி: குரங்கு பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டிக் குரங்கு
குட்டி குரங்கு ஒன்று, ஒரு குரங்கு பொம்மையுடன் சுற்றித்திரிவது இணையதளத்தில் பார்வையாளர்களை நெகிழவைத்துள்ளது.
இந்த குரங்கின் பெயர் பன்ச்.
இது ஜப்பானின் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் வசிக்கும் ஒரு ஜப்பானிய மெகாக் வகை குரங்கு.
ஒரு ஒராங்குட்டான் பொம்மையை, இக்குரங்கு எப்போதும் தன்னோடு எடுத்து செல்கிறது.
பிறந்த சில நாட்களிலேயே, இந்த குரங்கு அவரது தாயால் கைவிடப்பட்டது. அதற்கு ஆறுதல் அளிப்பதற்காக இந்த பொம்மை வழங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



