கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் 'சித்தி படை'- யார் இவர்கள்?

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் முழுவீச்சில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்பு கமலா ஹாரிஸ் அவரது சித்தி குறித்து பேசியதால், ‘சித்தி பிரிகேட்’ என்ற தமிழ் வம்சாவளியை சேர்ந்த மகளிர் அணி உருவாகி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

யார் அவர்கள்? அவர்கள் செய்யும் பணி என்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)