கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - இதுவரை என்ன நடந்தது? - காணொளி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - இதுவரை என்ன நடந்தது? - காணொளி
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக நேற்று காலை தமிழக ஊடகங்களில் செய்தி வெளியானது, பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படிப்பாக உயர்ந்தது.
தற்போது குறைந்தது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டை கள்ளக்குறிச்சி சம்பவம் உலுக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



