காணொளி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் நள்ளிரவில் என்ன நடந்தது?

காணொளி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் நள்ளிரவில் என்ன நடந்தது?

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தாலிபன்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இது பதிலடி என தாலிபன்கள் கூறி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தாலிபன் அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் வெளியான அறிக்கையில், 23 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபன் தரப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. எனினும், இந்த எண்ணிக்கைகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த மோதல் குறித்து இஸ்லாமாபாத்தில் இருந்து பிபிசி உருது செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத் வழங்கும் செய்தித்தொகுப்பை பார்க்கலாம். முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு