ராணுவத்தில் சேர விரும்பிய இவர், வாள் வீச்சு வீராங்கனையானது எப்படி?

ராணுவத்தில் சேர விரும்பிய இவர், வாள் வீச்சு வீராங்கனையானது எப்படி?

ருவாண்டாவை சேர்ந்த துஃபாஹா யூவிஹோராய் ஒரு சிறந்த வாள்வீச்சு வீராங்கனை.

மழலையர் பள்ளியில் படிக்கத் தொடங்கிய போது வாள்வீச்சு பயிற்சியை தொடங்கிய இவர், தற்போது ருவாண்டாவின் சிறந்த பெண் வாள்வீச்சு வீராங்கனையாக இருந்து வருகிறார்.

ட்ரீம்ஸ் ஃபென்சிங் கிளப் என்ற மையத்தை நிறுவி பலருக்கும் வாள்வீச்சு பயிற்சியை வழங்கி வருகிறார்.

தனது 26 வயதிலேயே 12 தங்க பதக்கங்களை பெற்றுள்ள இவர், சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

ருவாண்டா முழுவதும் வாள் வீச்சை பிரபலமாக்க வேண்டும் என்று கூறும் இவர், பலருக்கும் தனது ஆதரவை வழங்கி வருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)