You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறை: தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி மோதி என்ன பேசினார்?
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் சாவி எப்படி தொலைந்தது?
ஒடிஷா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "ஜெகந்நாதர் ஆலய கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?" என்றார்.
ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்துள்ள, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் இப்படி பேசியதாக அந்த மாநில அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
பிரதமரின் இந்தப் பேச்சிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)