விண்வெளிக்கு செல்லும் வீரர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்? காணொளி

விண்வெளிக்கு செல்லும் வீரர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்? காணொளி

மனிதன் விண்வெளியை ஆய்வு செய்ய தொடங்கி 60 ஆண்டுகள் ஆகின்றன. இது வரை விண்வெளி வீரர்கள் 20 பேர் பூமிக்கு திரும்பாமல் இறந்துள்ளனர்.

1986 மற்றும் 2003ம் ஆண்டுகளில் நாசா விண்வெளின் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேர் இறந்துள்ளனர்.

விண்வெளி பயணம் சவாலானது என்றாலும் இது வரை வெகு சிலர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகளுக்கு மட்டுமில்லாமல் வணிக ரீதியிலான விண்வெளி பயணங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

விண்வெளி வீரர்கள் பூமிக்கு அருகில் இருக்கும் விண்கலத்தில் உயிரிழந்தால், சில மணி நேரங்களில் அவரது குழுவினர் உடலுடன் பூமிக்கு திரும்ப முடியும். இதே மரணம் நிலாவில் நடைபெற்றால் பூமியை வந்தடைய சில நாட்கள் ஆகும்.

ஒரு விண்வெளி வீரர் இறந்து விட்டால், அப்போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து நாசா வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: