மாலத்தீவு: சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்த அதிபர் முய்சு இந்தியா பற்றி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, மாலத்தீவு: சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்த அதிபர் முய்சு இந்தியா பற்றி கூறியது என்ன?
மாலத்தீவு: சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்த அதிபர் முய்சு இந்தியா பற்றி கூறியது என்ன?

எதிர்வரும் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தான் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை கவனித்துக்கொள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில் முய்சு இவ்வாறு கூறியுள்ளார்.

மே 10-ஆம் தேதிக்குள் இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்றும் அதன் முதல் கட்டம் மார்ச் 10-ஆம் தேதி தொடங்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)