நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி? – காணொளி

காணொளிக் குறிப்பு, நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி? – காணொளி
நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி? – காணொளி

வயாகரா.

புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே அதற்கு விளம்பரம் செய்தார். போப் ஆண்டவர் அதை அங்கீகரித்தார்.

ஆனால், வேல்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும், தொழிற்சாலைகள் நிறைந்த மெர்தெர் டிட்வில் என்னும் சிற்றூர் மட்டும் இல்லையெனில், வயாகராவை பற்றி நாம் கேள்விபட்டிருக்கவே மாட்டோம். முன்பு ஒருமுறை அந்த ஊரில் உள்ள தொழிற்சாலைகள் சரிவைச் சந்தித்தன.

அப்போது, அங்கிருந்த ஆண்களில் பலர், இரும்புத் தொழிற்சாலையில் செய்து வந்த வேலையை இழந்தனர். நெருக்கடியான சூழலில், பணம் வேண்டி, உள்ளூரிலிருந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்குத் தாமாகவெ சென்று, ஒரு ஆய்வில் சோதனை எலிகளாகப் பங்கெடுத்தனர்.

அவர்களது கதை இது.

வயாகரா

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)