கடலில் விழுந்த ஏர் ஸ்கூட்டர் - தோல்வியில் முடிந்த சோதனை

காணொளிக் குறிப்பு, தோல்வியில் முடிந்த ஏர் ஸ்கூட்டர் சோதனை
கடலில் விழுந்த ஏர் ஸ்கூட்டர் - தோல்வியில் முடிந்த சோதனை

ஜூலை 25 அன்று ஒரு 'ஏர் ஸ்கூட்டர்' ஒன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றது. ஆனால் மேலே எழுந்த சிறிது நேரத்தில் தண்ணீரில் விழுந்தது.

இது பிரான்ஸை சேர்ந்த ஸபாடா எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பிரான்கி ஸபாடா இதனை இயக்கினார். ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

இது குறித்து பேசிய பிரான்கி ஸபாடா, பழைய ஹாலிவுட் படங்களில் வருவது போல ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்கு ஏர் ஸ்கூட்டர் மாதிரியான தனிநபர் பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி செல்லும் சேவையை வழங்குவதுதான் தனது நோக்கம் என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு