You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேடிஎம், பைஜூஸ் போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
முதலில் பைஜூஸ், இப்போது பேடிஎம். இந்திய பொருளாதாரத்தின் ஒளிரும் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்ட இவ்விரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
சமீப காலங்களில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிறுவனமாக பேடிஎம் கருதப்பட்டது. ஆனால், இப்போது அதன் பேமெண்ட் வங்கி (Payment Bank) நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வேகத்தில் சவாரி செய்யும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக் கதை இப்போது பலவீனமடைந்து வருவதற்கான காரணம் என்ன?
பேடிஎம் பேமெண்ட் வங்கி ஒழுங்குமுறை தொடர்பான பிரச்னைகளில் சிக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கே.ஒய்.சி (KYC-வாடிக்கையாளர்களின் தகவல்கள் சரிபார்ப்பு) மீறல் காரணமாக, பேடிஎம்-இல் பணமோசடி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, பேடிஎம் பேமெண்ட் வங்கியின் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மார்ச் 1, 2024 முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிதாக வைப்புத்தொகை செலுத்துதல், புதிய நிதி பரிமாற்றங்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைக் கண்டறிய தணிக்கை நிறுவனத்தை நியமிக்க பேடிஎம் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்ட இந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனம் இப்போது பல சவால்களை எதிர்கொள்கிறது.இந்த நிறுவனத்திடம் பணமில்லை. மேலும் அந்நிறுவனம், அதன் நிதி அறிக்கையை தாமதப்படுத்துகிறது. மேலும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்குபவர்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
2021-22 நிதியாண்டில், பைஜூஸின் வருமானம் ரூ.5298.43 கோடி. ஆனால், இழப்பு ரூ.8245 கோடி. செலவினம் 94 சதவீதம் அதிகரித்து, ரூ.13,668 கோடியாக இருந்தது.முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நிறுவனம் பிழைக்க வேண்டும் என கவலைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)