உத்தர பிரதேசம்: பசுவை கொன்றதாக கூறி கொல்லப்பட்ட இளைஞர் - என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

காணொளிக் குறிப்பு,
உத்தர பிரதேசம்: பசுவை கொன்றதாக கூறி கொல்லப்பட்ட இளைஞர் - என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உத்தரப்பிரதேசத்தின் வடக்கு நகரமான மொராதாபாத்தில் உள்ள நவீன் மண்டி இந்த பகுதியில் இரண்டு கொலைகள் அரங்கேறின.

அதில் ஒன்று பசு மாடு, இரண்டாவது பசுவைக் கொன்றதாக கூறப்படும் நபர். பசுவைக் கொன்ற வழக்கில் காவல்துறை ஒருவரைக் கைது செய்துள்ளது. ஆனால் அதே இடத்தில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இறந்த ஷாஹதீனின் குடும்பம் மொராதாபாத் கல்ஷாஹீத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அவர் ஒரு பாடி பில்டராக இருந்துள்ளார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. சமீபத்திய நாட்களில் அவர் கூலி வேலை செய்து வந்ததாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கூறுகின்றனர்.

அவருக்கு அன்றிரவு நடந்தது என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)