You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்பின் 50% வரி தமிழ்நாட்டில் எந்த துறைகளை பாதிக்கும்?
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி (tariff) இன்று (ஆகஸ்ட் 27 புதன்கிழமை) அமலுக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களில் பல்வேறு கட்டங்களாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு உள்ளாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் பல்வேறு துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் அதன் இணை பொருட்கள் மற்றும் வாகன பாகங்கள் வரி விதிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 8.9 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்காவின் கடல் உணவுப் பொருட்களின் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5% ஆக உள்ளது.
50% வரிவிதிப்பு என்பது எதிர்பாராத ஒன்று தான் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், முதலில் அறிவிக்கப்பட்ட 25% வரிவிதிப்பை தவிர்க்க முடியாது என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாகவும் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் உயர்த்தப்பட்ட 50% என்பதை 25% ஆக இறுதி செய்ய முடியும் என்றே அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நாளை 50% வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இதனால் தாக்கம் ஏற்படப் போகும் 5 துறைகள் என்னென்ன என்பதை காணொளியில் பார்க்கலாம்:
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு