You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிறிஸ்துமஸ்: இயேசு பிறந்த பெத்லஹேமில் எப்படி இருந்தது தெரியுமா?
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக, இயேசுவின் பிறந்த இடமாக கிறிஸ்துவர்கள் நம்பும் பெத்லெஹெமில் கிறிஸ்துமஸ் பெருவிழா களையிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முன்பு இங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் உலகம் முழுவதுதிலும் இருந்து மக்கள் கலந்துகொள்வது வழக்கம். தற்போது போர் நடைபெற்று வருவதால் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் நடைபெறும் சிறப்பு ஆண்டு பிரார்த்தனைகளும் ரத்து செய்யப்பட்டன.
பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரங்கள், அணிவகுப்புகள் என உற்சாகமாக காட்சியளிக்கும் பெத்லேஹேமின் வீதிகளில் ஒருவித அமைதி நிலவுகிறது. ஒருசில இடங்களில் மட்டும் சிறிய அளவில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. பழமையான Nativity தேவாலயம் முன்பு INcubator-ல் குழந்தை இயேசு இருப்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இடிபாடுகளுக்கு நடுவே பெண் ஒருவர் கையில் குழந்தையை தாங்கி இருப்பது போன்ற சிற்பமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
(மேங்கர்)Manger Square மூலம் பலரும் கைகயில் பாலத்தீன கொடியை ஏந்தியப்படி இருந்தனர். போர் பாதிப்பு குறித்த பல்வேறு சிற்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
காஸாவில் நடைபெற்று வரும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஜெருசலேம் லத்தின் மரபுவழி திருச்சபையின் தலைவர் (பியர்பட்டிஸ்டா பீஸ்ஸபால) Pierbattista Pizzaballa வலியுறுத்தினார்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் பாலத்தீனர்களாக ஒன்றுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த இரவில் தங்கள் அனைவரின் இதயமும் பெத்லெஹேமில் இருப்பதாக போப் பிரான்ஸில் உருக்கமாக தெரிவித்தார். வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸுக்கு முன் தினம் நடத்தப்படும் ஆண்டு கூட்டுப் பிரார்த்தனையில் அவர் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய போப் பிரான்ஸிஸ், பயனற்ற தர்க்கங்களால் நடைபெறும் போர் காரணமாக அமைதியின் இளவரர் மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆயுத மோதல்கள் இன்றும் அவருக்கு உலகில் இடம் கிடைக்காமல் தடுக்கிறது என்று குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது இதில் 1,140 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை பணயக்கைதியாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதைதொடர்ந்து இருதரப்புக்கு கடும் போர் நடந்து வருகிறது. நடுவில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தில் பணயக்கைதிகளில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும் 129 பேர் தற்போதும் அவர்கள் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் கூறிவருகிறது. காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் காரணமான லட்சக்கணக்கானோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் 20, 424 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)