சிராவயல் மஞ்சு விரட்டில் 2 பேர் உயிரிழப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

சிராவயல் மஞ்சு விரட்டில் 2 பேர் உயிரிழப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

தமிழகத்தில் மஞ்சுவிரட்டை ஒட்டி இரு உயிர்கள் இன்று பறிபோயின. சிவகங்கை சிராவயலில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

பொட்டல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு இளைஞரும், 12 வயது சிறுவனும் காளை முட்டியதில் உயிரிழந்தனர்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)