நரேந்திர மோதியின் '4 அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதியின் 4 'அஸ்திரங்கள்' தேர்தலில் தோல்வியடைந்தது எப்படி?
நரேந்திர மோதியின் '4 அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி?

பா.ஜ.க-வோ தேசிய ஜனநாயகக் கூட்டணியோ எதிர்பார்த்தபடி எண்ணிக்கைகள் கிடைக்கவில்லை என்பதால், பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்புகள் தவறாகிப் போயிருக்கின்றன.

இந்தப் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்து, பல அரசியல் கட்சிகள், 'இந்தியா கூட்டணி' அமைத்து ஆளும் பா.ஜ.க-வுக்கு சவால் விடுத்தன. கருத்துக்கணிப்புகளை விட இந்தக் கூட்டணி தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, "இறுதியில் பிரதமர் மோதியே போட்டியின் மையப்புள்ளியாக மாறினார்."

அதாவது, 'மோதிக்கு வாக்களியுங்கள், அல்லது மோதிக்கு எதிராக வாக்களியுங்கள்' என்பதே தேர்தலின் முக்கியப் பிரச்னையாக மாறியிருந்த நிலையில், 'மோதிக்கு வாக்களியுங்கள்' என்ற முழக்கம் பா.ஜ.க எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பதையே முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மையைக் கடக்க உதவிய பிரச்னைகள் என்னென்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)