ஈலோன் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது பற்றி டிரம்ப் என்ன சொல்கிறார்?

காணொளிக் குறிப்பு, புதிய கட்சி தொடங்கிய மஸ்க் - டிரம்பின் எதிர்வினை என்ன?
ஈலோன் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது பற்றி டிரம்ப் என்ன சொல்கிறார்?

மஸ்க் மூன்றாவது கட்சியைத் தொடங்குவது கேலிக்குரியது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூலை 06) செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூன்றாவது கட்சியைத் தொடங்குவது கேலிக்குரியது என்று நான் நினைக்கிறேன். குடியரசுக் கட்சி மிகவும் வெற்றிகரமாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சி தங்களது வழியைத் தவறவிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் இரு கட்சி முறையே இருந்து வந்துள்ளது. மூன்றாவது கட்சி ஒன்றைத் தொடங்குவதால் குழப்பமே அதிகரிக்கும். இந்த அமைப்பு இரண்டு கட்சிகளுக்காகவே உருவாக்கப்பட்டது போல உள்ளது.

மூன்றாவது கட்சி ஒருபோதும் வெற்றியடைந்ததில்லை. எனவே, ஈலோன் மஸ்க் மகிழ்ச்சியுடன் செயல்படலாம். ஆனால் அது கேலி்க்குரியது என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு