உத்தராகண்ட் சுரங்கப்பாதை உள்ளே தொழிலாளர்கள் எப்படி உள்ளனர்? வீடியோ வெளியீடு
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 10-வது நாளாக நீடிக்கிறது.
இந்த மீட்புப் பணியில் தற்போது முதல் வெற்றி கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் இருக்கும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. அத்துடன் தொழிலாளர்களை விரைவில் பத்திரமாக மீட்டுவிட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட குழுவினர், ஆறு அங்குல குழாயை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ளதாகக் கூறியிருந்தனர். தற்போது, அந்த குழாயின் வழியில் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதனையும் வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், PTI
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



