மியான்மர் நிலநடுக்கம்: குலுங்கிய மருத்துவமனை, கைக்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

காணொளிக் குறிப்பு,
மியான்மர் நிலநடுக்கம்: குலுங்கிய மருத்துவமனை, கைக்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, சீனா ருய்லி நகர மருத்துவமனையின் சிசிடிவியில் பதிவான காட்சி இது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில், நிலநடுக்கத்தின்போது இருந்த செவிலியர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

அதுகுறித்துப் பேசிய ஒரு செவிலியர், "அப்போது வேறு எதையும் செய்ய நேரம் இருக்கவில்லை. நான் கையில் இருந்த குழந்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என்னுடன் இருந்த மற்றொரு செவிலியர், பிற குழந்தைகளைப் பிடித்துக் கொண்டார்.

அந்த நேரத்தில் குலுங்கல் மிகவும் பயங்கரமாக இருந்தது. என் கையில் இருந்த இரண்டு மாத குழந்தை மிகவும் பயந்துவிட்டான். நான் அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.