'ரோஹித் நின்று ஆடியிருந்தால் கதையே வேற'- பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சுக்குநூறாக நொறுக்கியது.
இந்த நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்தும் ஆஸ்திரேலியாவின் வெற்றி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் X சமூக வலைதளத்தில் தான் கடந்த அக்டோபர் 12ம் தேதி ஆஸ்திரேலியா குறித்து பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதில், “ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா உடனான இந்தப்போட்டியில் தோல்வியுற்றால் இந்தத் தொடரில் மற்ற எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதை மீண்டும் பகிர்ந்து, “ஒரு மாதத்திற்கு முன்பே சொன்னேன்” என குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



