'இந்தியாவுக்கு எதிராக 120 ரன் எடுக்க முடியாதா?' - பாகிஸ்தான் பேட்டிங்கை சாடும் ஜாம்பவான்கள்
"இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியின் மன உறுதி மற்றும் அதை ஆடுகளத்தில் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஆகிய எல்லாமே கேள்விக்குறியாகியுள்ளது,” டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அடைந்த தோல்வி பற்றி இந்த காட்டமான வார்த்தைகளை பேசியிருப்பது வேறு யாருமில்லை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர்தான்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கொந்தளித்து, தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-ஹக் தனது யூடியூப் சேனலான 'மேட்ச் வின்னர்'இல்,”பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது, ஆனால்இந்திய அணி அதை க்காட்டிலும் சிறப்பாக விளையாடியது,”என்று குறிப்பிட்டார்.“பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அதைவிட சிறப்பாக இருந்தது. குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் இந்திய அணி தன் தைரியத்தை இழக்கவே இல்லை,” என்றார் அவர்.
”பேட்டிங் செய்யும் போது ’எடுக்க வேண்டிய ரன்களின் சராசரி’ ஏழு ரன்களுக்கு மேல் செல்ல பாகிஸ்தான் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. நிலைமை எங்கிருந்து எங்கே சென்றுவிட்டது என்பதை பாகிஸ்தானால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பாகிஸ்தானின் கையில் விக்கெட்டுகள் இருந்தன. இருந்தபோதிலும்அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை,” என்று இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டார். ‘‘பாகிஸ்தானின் பேட்டிங் மோசமாகஇருந்தது. இமாத் வாசிம் மோசமாக பேட்டிங் செய்தார்.
அவர் இரண்டு மூன்று முறை ரன்அவுட் ஆவதில் இருந்துதப்பித்தார். 23 பந்துகளில்ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் அவுட்டும் ஆகவில்லை, ஸ்கோரும் செய்யவில்லை. ரிஸ்வான் நிறைய நேரம் விளையாடினார். ஆனால் போட்டியை முடிக்க முடியவில்லை. போட்டியில் அணியின் நிலை என்ன என்பதை பாகிஸ்தான் ஆழமாக சிந்திக்க வேண்டும்,”என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியாவின் பேட்டிங் முடிந்த பிறகு செய்த ட்வீட்டும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பந்துவீச்சுக்குப் பிறகு அவர்எக்ஸ் தளத்தில்,"நியூயார்க்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அற்புதமாக பந்து வீசியது. இந்தப் போட்டியில்அபாரமான ஆட்டம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் அணி சிறப்பாக சேஸ் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பதிவிட்டிருந்தார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



