ராஜேந்திர சோழனின் பெருந்தன்மை - தோற்ற அரசர்களுக்கே அரியாசனத்தை கொடுத்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, ராஜேந்திர சோழன், தன்னிடம் தோற்ற அரசர்களுக்கே மீண்டும் அரியாசனத்தை வழங்கியது ஏன் தெரியுமா?
ராஜேந்திர சோழனின் பெருந்தன்மை - தோற்ற அரசர்களுக்கே அரியாசனத்தை கொடுத்தது ஏன்?

போரில் அரசர்களை வீழ்த்தி அவர்கள் ஆட்சிப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் தன்னிடம் வீழ்ந்தவர்களுக்கே மீண்டும் அரியாசனத்தை ஒரு அரசன் ஒப்படைத்த நிகழ்வு, ஒருமுறை அல்ல, பல முறை மிகச் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது. அவர் பெயர் ராஜேந்திர சோழன்.

தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல் கடந்து சென்று கிழக்காசிய தேசங்களையும் வென்று தனது எல்லையாக்கி கொண்டார். சாளுக்கியர், பாண்டியர், சேரர், சிங்கள அரசர், வங்கதேச அரசர், கடார அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக்கொண்ட மொத்த காலம் வெறும் 10 ஆண்டுகள்தான். கங்கை முதல் கடாரம் வரை நடைபெற்ற பல போர்களில் அவர் வென்ற போதிலும் அப்பகுதிகள் அந்தந்த அரசர்களிடமே மீண்டும் வழங்கப்பட்டது.

தலைமைக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தும் அரசாக அவற்றை மாற்றி, வெற்றி பெற்ற இடங்களை மண்டலங்களாக பிரித்து கைதேர்ந்தவர்களை அப்பகுதிக்கு தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்தார். நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வதை விட செல்வங்களைச் சேர்ப்பது, வணிக நலன்களைப் பாதுகாப்பதே ராஜேந்திர சோழன் எண்ணமாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு