'1.5 மணி நேரம் நிற்க வேண்டும்' புறநகர் ரயில்களில் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, கர்ப்பிணி பெண்கள் மும்பை ரயில்களில் சந்திக்கும் சவால்கள்
'1.5 மணி நேரம் நிற்க வேண்டும்' புறநகர் ரயில்களில் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

மும்பை போன்ற தொழில் வளர்ச்சி மிகுந்த, மக்கள் தொகை அடர்த்தி மிகுதியாக உள்ள பெருநகரங்களில் புறநகர் ரயில்கள் தான் பொதுப் போக்குவரத்தின் உயிர்நாடியாக உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இதைச் சார்ந்து உள்ளனர். ஆனால் இவை பெண்களுக்கு வசதியானதாக உள்ளதா என்கிற கேள்வியும் உள்ளது.

சமீபத்தில் மும்பை புறநகர் ரயிலில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ரயில் பயணத்தின் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் புறநகர் ரயில் பயண பெண்களுக்கு எவ்வாறு உள்ளது, அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு எவ்வாறு உள்ளதை என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் காணொளி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு