கவச பாதுகாப்பு தொழில்நுட்பம் இருந்திருந்தால் ரயில் விபத்தை தடுத்திருக்க முடியுமா?
ஒடிஷாவின் பாலசோரில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் பாலசோரில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 187 பேர் யார் என்று அடையாளம் தெரியவில்லை என்றும், தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும் என்றும் ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இடத்தை ஞாயிறன்று நேரில் பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ மின்னனு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது. யார் இதனை செய்தார்கள், எப்படி நிகழ்ந்தது என்பது முறையான விசாரணைக்குப் பின் தெரியவரும்” என்று தெரிவித்தார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவச் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. கவச் என்றால் என்ன?
கவச் பாதுகாப்பு முறை என்பது ரயில்களில் விபத்து நிகழாமல் தடுத்து நிறுத்த உதவும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்தப் பாதுகாப்புக் கருவியை ரயில் இன்ஞ்சினில் பொருத்திவிட்டால், இரண்டு ரயில்கள் ஒரே தடத்தில் வந்தாலும் மோதிக் கொள்ளாமல் தடுத்துவிட முடியும். ஏறக்குறைய அரை கி.மீ முதல் ஒரு கி.மீ தொலைவுக்குள்ளேயே இரு ரயில்களுக்கும் சிக்னல் கொடுத்து விபத்து ஏற்படாமல் ரயிலை பாதுகாக்கும். ரயிலை இயங்கவிடாமல் நிறுத்திவிடும் (முழு தகவல் காணொளியில்)

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



