மொழியின் பெயரில் பிரிந்த வங்கதேசம், இப்போது மத தேசியவாத நாடாக மாறுகிறதா?

மொழியின் பெயரில் பிரிந்த வங்கதேசம், இப்போது மத தேசியவாத நாடாக மாறுகிறதா?

பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பின்னர் மொழி அடிப்படையில் அதிலிருந்து வங்கதேசம் பிரிந்தது. வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கு அடித்தளம் வங்காள தேசியவாதம்.

முகமது அலி ஜின்னா மார்ச் 1948இல் உருது மொழியை பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவித்தபோது, வங்காள தேசியவாதத்திற்கான விதை விதைக்கப்பட்டது. இதன் விளைவாக, 1952இல் கிழக்கு பாகிஸ்தானில் மொழி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.

வங்கதேசம் பிரிந்தபோது, மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது குறித்து மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர். மத அடையாளம் மட்டுமே போதுமானது இல்லை என்று மக்கள் கூறத் தொடங்கினர். அத்தகைய சூழ்நிலையில், மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கும் முடிவு தவறானது என்ற பேச்சு எழுந்தது. அதோடு, வங்காள அடையாளம் என்பது இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து வேறுபட்டது என்றும் மக்கள் கூறத் தொடங்கினர்.

மொழியின் பெயரில் பிரிந்த வங்கதேசம், இப்போது மத தேசியவாத நாடாக மாறுகிறதா?

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)