You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்: கடனை திருப்பிச் செலுத்த மகள்களையே விற்கும் பெற்றோர் - ஏன்?
பஷீர் அகமது, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த தொழிலாளி. இந்த பின்தங்கிய பகுதியில் மற்ற சிலரை போன்றே இவரும் தன்னுடைய சிறு வயது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கடினமான முடிவை எடுத்தார்.
குழந்தை திருமணங்கள் இங்கு 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் குடும்பங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை இதற்கு காரணமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
குழந்தை திருமணங்கள் அதிகரிப்பால் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதும் பாதிக்கப்படுவதாக, 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்த பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது குறித்து கவனம் செலுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதிக சிறுமிகள் ‘காலநிலை மணமகள்களாக’ மாற்றப்படுவதை தடுக்க காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)