காணொளி: கடத்தி வந்த மதுவுடன் தடுப்புகளை தகர்த்த கார்

காணொளிக் குறிப்பு, கடத்தி வந்த மதுவுடன் தடுப்புகளை தகர்த்த கார்
காணொளி: கடத்தி வந்த மதுவுடன் தடுப்புகளை தகர்த்த கார்

மதுக்கடத்தலை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ர் ஒன்று உடைத்து சென்றது.

குஜராத்தில் உள்ள சோட்டாஉதேபுர்-ல் மதுக்கடத்தல் செய்பவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால், வேகமாக வந்த ஒரு கார் தடுப்புகளைத் தகர்த்துவிட்டுச் சென்றது.

பின், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்தி சென்ற காவல்துறையினர், அக்காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் உள்ளிருந்தவர் தப்பியோடினார்.

பின்னர் காருக்குள் இருந்த மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

காருக்குள் இருந்து தப்பியோடியவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு