காணொளி: டிரம்பின் திட்டத்தால் சீனா, ரஷ்யா பலன் பெற போகிறதா?
ரஷ்யா மற்றும் சீனா டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரீன்லாந்தை கைப்பற்றுவதைத் தடுக்க, அந்த தீவை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், டிரம்பின் கிரீன்லாந்து தொடர்பான லட்சியங்களையும், அதற்காக அவர் விடுக்கும் எச்சரிக்கைகளையும் புதின் மற்றும் ஷி ஜின்பிங் வரவேற்கலாம் என பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். உண்மையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்பின் நோக்கம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு லாபமாக மாறுமா?
அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனம் கிரீன்லாந்து மீதுதான் தற்போது அதிகம் இருப்பது போல தெரிகிறது.
"தற்போது ரஷ்யாவும் சீனாவும் தங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாத சூழலில் இருக்கலாம் என்கிறார் ஐரோப்பிய கொள்கை மைய ஆய்வாளர் மரியா மார்ட்டிசியூட்.
"ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ கூட்டணியும் தங்களின் மிக சக்திவாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவாலேயே மிரட்டப்படுவது சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில், இது யுக்ரேனில் ரஷ்யாவின் செயல்களுக்கும், தைவான் தொடர்பான சீனாவின் லட்சியங்களுக்கும் சட்டபூர்வத்தன்மையை வழங்கலாம்" என்கிறார் அவர்.
கிரீன்லாந்து தொடர்பான ஐரோப்பாவுடனான டிரம்பின் கருத்து வேறுபாட்டை ரஷ்யாவும் சீனாவும் உண்மையில் எவ்வாறு பார்க்கின்றன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



