காணொளி: அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

காணொளிக் குறிப்பு, குடிவரவு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு - அமெரிக்காவில் ஒருவர் பலி
காணொளி: அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இறந்தவர் 37 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் பிரெட்டி எனவும் அவர் செவிலியர் என்றும் மினசோட்டா செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நகரில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் குடிவரவு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டு 3 வாரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

“வன்முறையாக நடந்துகொண்டதால்” அதிகாரிகள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டி நோம் கூறுகிறார்.

ஆனால், மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் ஃபெடரல் அதிகாரிகளின் விளக்கம் “அர்த்தமற்றது” மற்றும் “பொய்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், மினியாபொலிஸ் மேயரும் ஆளுநரும் “கலவரத்தை தூண்டுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு