நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியின் எதிர்காலம் என்ன?

காணொளிக் குறிப்பு, விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியின் எதிர்காலம் என்ன?

திரைக் கலைஞர் விஜய் தமிழ்நாட்டில் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அந்தக் கட்சியின் எதிர்காலம் என்ன?

அதுகுறித்து மூத்த செய்தியாளர் குபேந்திரன் பிபிசியிடம் விரிவாகப் பேசியுள்ளார்.

விஜயின் கட்சி குறித்துப் பேசிய குபேந்திரன் அதை வரவேற்பதாகவும் அவர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறினார். அதேவேளையில், "அவருடைய மூன்று பக்க அறிக்கை வழக்கம் போல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும்போது கூறுவதைப் போலவே கூறியுள்ளார்.

ஆனால், குறைந்தபட்சம் இப்படியொரு இயக்கத்தை வழிநடத்தப் போவதாக அவர் மக்கள் முன்னணியில் அறிவித்திருக்கலாம். அதை ஏன் செய்தியாளர்கள் முன்னிலையில் செய்யவில்லை?

டிஜிட்டல் உலகில் பின்னணியில் இருந்தே இயங்கலாம். மக்கள் முன்பாகச் செல்ல வேண்டியதில்லை என்று அவர் நினைக்கிறார் என்றால் அது மிகப்பெரிய பாதகத்தில் சென்று முடியும்," என்று கூறியுள்ளார். மேலும் விரிவாக காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)