இரான்- இஸ்ரேல் மோதலால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்படுமா?
இரான்- இஸ்ரேல் மோதலால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்படுமா?
ஜூன் 13ஆம் தேதி இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின், ஹோர்முஸ் நீரிணை மூடப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த வழிதடம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு இந்த நீரிணை முக்கியமானது.
நீரிணை என்பது இரண்டு கடல்களையோ அல்லது இரண்டு பெருங்கடல்களையோ இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழித்தடம். ஹோர்முஸ் நீரிணை, மத்திய கிழக்கின் எண்ணெய் வளமிக்க நாடுகளை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பல நாடுகளுடன் இணைக்கிறது.
ஆனால் இந்தப் பகுதி பல ஆண்டுகளாகவே பன்முக அரசியல் பதற்றங்களுக்கும் மோதல்களுக்கும் மையமாக இருந்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை எங்கே உள்ளது? இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



