மோதியின் ரஷ்யப் பயணத்தை அமெரிக்கா, மேற்கு நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? - காணொளி
மோதியின் ரஷ்யப் பயணத்தை அமெரிக்கா, மேற்கு நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? - காணொளி
கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். ஐரோப்பிய தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வ சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் நாட்டுக்கு ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கி பல ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ஐரோப்பிய தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்கு செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின்னர், ரஷ்யாவுக்கு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுதான்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



