பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்
பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்
காஸாவில் உணவு பெற காத்திருந்த மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் மக்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பினர்.
உணவு பெற வந்த 1000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமை அலுவலகம் கூறுகிறது. ஆனால், எச்சரிக்கைக்காகவே துப்பாக்கிச்சூடு பயன்படுத்தப்பட்டதாகவும், இறப்பு எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



