'புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கத்துக்கட்டும்' - விஜய் பேசியது என்ன?
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடக்கும் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் மிகுந்த ஊடக கவனத்தை பெற்றிருந்தது. புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுக வளாக மைதானத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய விஜய், "நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இங்கே பேச வந்திருக்கிறேன். இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். வரவிருக்கும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை நம் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இங்கிருக்கும் அரசைப் பொருத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை." என்று விமர்சித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



