'பணக்காரர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகும் பெண்கள்' - துபையில் என்ன நடக்கிறது?
சங்கடம் ஏற்படுத்தும் அந்த வீடியோவை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது துபை போர்ட்டா பாட்டி (Dubai porta potty) என்ற ஹேஷ்டேகை பார்த்திருக்கலாம். 450 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. துபையில் உள்ள இன்ஃப்ளூயன்சர்கள் குறித்த அதிர்ச்சி கதைகள் அவற்றில் உள்ளன.
இணையத்தில் மோனா கிஸ் என அறியப்படும் 23 வயது மோனிக் கருங்கி, 2022ல் துபையில் இறந்தபோது சங்கடம் ஏற்படுத்தும் வீடியோ வைரலானது.
'துபை போர்ட்டா பாட்டியில் இருந்த பெண்' என இணையம் அவரை அழைத்தது, வீடியோ கசிந்ததால் தான் அவர் குதித்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால், இணையத்தில் கூறப்பட்டது தவறு. கசிந்த வீடியோக்களில் இருந்தது மோனிக் இல்லை என்பதை பிபிசி ஐ இன்வஸ்டிகேஷன் கண்டறிந்தது. உண்மையில் அவருக்கு நடந்தது என்ன?
உகாண்டாவிலிருந்து அவர் துபைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சென்றதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், அவர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும், 'செல்வாக்கு படைத்த' ஒருவருக்கு அவர் கடன்பட்டதாகவும் அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், இணையத்தில் இவை எதுவும் தெரிவதில்லை.
உயரமான கட்டடத்திலிருந்து விழுந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் போலீஸ் கூறுவதாக மோனிக்கின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், மேலதிக விசாரணையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



