You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்பா அல்லது ஆபத்தா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறியா என்று பலருக்கும் சந்தேகம் எழும் நேரத்தில் அது குறித்து ஆய்வுகளும் நிபுணர்களும் என்ன கூறுகின்றனர் என்று அலசுகிறது இந்த வீடியோ.
ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆங்கிலத்தில் wet dreams என கூறுகின்றனர். ஆண் குழந்தைகள் பதின் பருவத்தை அடையும் போது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவு அதிகமாகிறது எனவும் இதனால் தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தூக்கத்தின் போது விந்து வெளியேறுவது விந்து எண்ணிக்கை குறைவதன் அறிகுறி, மலட்டுத்தன்மையின் ஆரம்பக்கட்டம் என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் ஆண்களிடையே நிலவுகின்றன. எனினும் இது இயல்பான நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு