பிபிசி நட்சத்திர விளையாட்டு வீராங்கனை 2022 விருதை வென்றார் மனிகா பத்ரா

பிபிசி நட்சத்திர விளையாட்டு வீராங்கனை 2022 விருதை வென்றார் மனிகா பத்ரா

இந்தியாவின் சிறந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா. இந்திய பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகளில், தரவரிசை பட்டியலில் உச்ச இடத்தை எட்டியவர்.ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள மனிகா பத்ரா, 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வெண்கல பதக்கம் வென்ற மனிகா பத்ரா, ஆகிய கோப்பையில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

2018ஆம் ஆண்டு அர்ஜுனா விருதை பெற்ற மனிகா பத்ராவுக்கு 2020ஆம் ஆண்டில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிபிசி விளையாட்டு வீராங்கனை 2022 விருது விழாவில், 2022ஆம் ஆண்டின் நட்சத்திர வீராங்கனை விருது மனிகா பத்ராவுக்கு வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: