சமூக ஊடக பிரபலங்களுக்கு அரசியல் தலைவர்கள் நேர்காணல் வழங்குவதன் பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, வெகுஜன ஊடகங்களை காட்டிலும், சமூக ஊடகங்களுக்கு அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்துவது ஏன்?
சமூக ஊடக பிரபலங்களுக்கு அரசியல் தலைவர்கள் நேர்காணல் வழங்குவதன் பின்னணி என்ன?

இந்திய அரசியலில் சில நேர்காணல்கள் அதிர்வுகளை கிளப்பியிருக்கின்றன. அது நாளிதழோ, தொலைக்காட்சி நேர்காணல்களோ, சில கேள்விகள் அரசியல் தலைவர்களுக்கு கடும் நெருக்கடி அளித்திருக்கிறது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களின் யுகம்.

அதனால் இன்று அரசியல் தலைவர்கள் மக்களைச் சென்றடைய வெகுஜன ஊடகங்களுக்கு அப்பால், பல உத்திகளை கையாளுகின்றனர். இதில் சமூக ஊடக பிரபலங்களுக்கு தங்களின் மென்மையான பக்கத்தை காட்டுவதன் பொருட்டு அதற்கேற்ப நேர்காணல் கொடுப்பது சமீபத்திய உத்தியாக மாறிவருகிறது.

சென்னையில் வசிக்கும் சமூக ஊடகப் பிரபலமான சமீஹாவுக்கு 22 வயது. சமீபத்தில் இவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை தன்னுடைய யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்திருந்தார். யதார்த்தமான உரையாடலுடன் வெளிவந்த அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

சமூக ஊடக பிரபலங்களுக்கு அரசியல் தலைவர்கள் நேர்காணல் வழங்குவதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு யூடியூபரான இர்ஃபானும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை நேர்காணல் செய்திருக்கிறார். கனிமொழியை அவர் சந்தித்தபோது ‘Weird Food Challenge’ எனும் சுவாரஸ்யமான சவாலை முன்வைத்திருந்தார். இர்பானை பின்தொடர்பவர்களிடையே இந்த காணொளி வரவேற்பை பெற்றது.

வடஇந்தியாவிலும் அரசியல் பிரமுகர்கள் யூடியூபர்களுக்கு நேர்காணல் அளிப்பது அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் பல கோடி ரூபாயை முதலீடு செய்வதாக தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பாக்கில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வெகுஜன ஊடகங்களை காட்டிலும், சமூக ஊடகங்களுக்கு அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்துவது ஏன்? முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)