காணொளி: பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரிட்டன்; கியர் ஸ்டாமர் சொன்னது என்ன?
பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கீயர் ஸ்டாமர், "அமைதிக்கான நம்பிக்கையை காப்பாற்றவும், பாலத்தீனம், இஸ்ரேலிய மக்களுக்கு இருநாட்டு தீர்வு கிடைக்கவும், பாலத்தீனத்தை பிரிட்டன் தனி நாடாக அங்கீகரிக்கிறது" என தெரிவித்தார்.
மேலும், "எல்லையில் உள்ள ஏற்றுக்கொள்ள முடியாத கட்டுப்பாடுகளை நீக்குமாறு இஸ்ரேலிய அரசாங்கத்தை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். இந்த கொடூரமான தந்திரங்களை நிறுத்துங்கள். உதவிகள் அதிகமாகட்டும். ஹமாஸ் நடவடிக்கைகளால் மேற்குக் கரையில் மோதல் மற்றும் குடியேற்றக் கட்டுமானத்தை இஸ்ரேலிய அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது. இரு நாடுகள் தீர்வின் மீதான நம்பிக்கை மங்கி வருகிறது. ஆனால் அந்த ஒளியை அணைய விட முடியாது." என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



