இந்தோனீசியா தனது தலைநகரை அடர் காட்டுக்குள் இடம் மாற்றுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியா தனது தலைநகரை அடர்ந்த காட்டுக்குள் மாற்றுவது ஏன்? - காணொளி

இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தா உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறியப்படுகிறது. எனவே அந்நாட்டு அரசாங்கம் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது.

நுசந்தரா எனும் அந்த புதிய தலைநகரம் ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் உருவாக்கப்பட்டு வருவதால் இது ஒரு துணிச்சலான திட்டமாக கருதப்படுகிறது.

அதிபர் ஜோகோ விடோடோவின் பதவி காலம் முடிவடையும் நிலையில் இந்த புதிய தலைநகரின் உருவாக்கம் அவரின் லட்சிய திட்டமாகவும் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாகவும் இருக்கும்.

முதலில் 2019-இல் அறிவிக்கப்பட்ட தலைநகர் கட்டமைக்கும் திட்டத்தின் கட்டுமானம் 2022-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கியது. தற்போது கட்டுமானங்கள் நடந்து வருகிறது. விரைவில் அந்த தலைநகரம் அதன் குடியிருப்பாளர்களை வரவேற்க தயார் நிலையில் இருக்கும்.

மேலதிகத் தகவல்கள் காணொளியில்.

இந்தோனீசியா, நுசந்தரா

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)