You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் சர்ச்சை வரலாறு
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக்ஸ் தொடங்கியது. பண்டைய கிரேக்கர்கள் நெருப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். தங்கள் கோவில்களின் உள்ளே சுடரை அவர்கள் எரிய விட்டனர்.
முதன்முதலாக 1928ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்ஸ்டர்டாம் விளையாட்டுகளில் ஒரு குறியீட்டுச் சுடர் பயன்படுத்தப்பட்டது.
எனினும், 1936 வரை ஒலிம்பிக் போட்டிகளில் ஜோதி பயன்படுத்தப்படவில்லை. இதற்கு பின்னால் ஒரு தந்திரமான வரலாறு உள்ளது.
ஜெர்மனியின் பெர்லினில் இந்த விளையாட்டுகள் நடைபெற்றன. அப்போது அந்த பகுதி நாஜி ஆட்சியின் கீழ் இருந்தது.
ஜெர்மனை மேன்மை பொருந்தியதாக காட்ட நாஜிக்கள் விரும்பினர். பண்டைய கிரீஸ் என்பது ஜெர்மனிய பேரரசின் ஆரிய முன்னோடி என்று அவர்கள் நம்பினர். எனவே, தாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பிய நாடுகள் இடம்பெறும் வகையில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்துக்கான பாதையை அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, ஒலிம்பியாவில் இருந்து பெர்லினுக்கு ஜோதி கொண்டு வரப்பட்டது.
இன்றைய காலத்தில் இந்த ஜோதி ஓட்டம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
ஒலிம்பியாவில் உள்ள கோவிலுக்கு வெளியில் சிறப்பு கண்ணாடியை பயன்படுத்தி சூரிய கதிர்களில் இருந்து இந்த சுடர் பெறப்படுகிறது.
ஒவ்வொரு ஒலிம்பிக் தொடருக்கும் தனி பாதை, தனி ஜோதி பயன்படுத்தப்படுகிறது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் ஒலிம்பிக்கின் பிரதான நோக்கங்களான மேன்மை, மரியாதை, நட்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஜோதி வடிவமைக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)