காணொளி: புதுவை தவெக கூட்டம் - கரூர் சம்பவத்தைக் கூறி எச்சரித்த பெண் அதிகாரி
காணொளி: புதுவை தவெக கூட்டம் - கரூர் சம்பவத்தைக் கூறி எச்சரித்த பெண் அதிகாரி
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடக்கும் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் மிகுந்த ஊடக கவனத்தை பெற்றிருந்தது.
புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுக வளாக மைதானத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் என புதுச்சேரி காவல் துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், இன்று காலை 5 மணி முதலே அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஈஷா சிங் கரூர் கூட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு எச்சரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



